துயர் துடைக்க பயிலும் இம்ரான்

உயர்நிலை நான்கில் பயின்றபோது ஆசியப் பெண்கள் நல்வாழ்வுக் கழகத்தில் மூன்று வாரங்களுக்கு வேலையிடப் பயிற்சியில் ஈடுப்பட் டிருந்தார் 21 வயது முஹம்மது இம்ரான் ஜ‌ஷிருதீன். அங்கு நோயால் வேதனையுற்ற உடல் குறையுள்ளோரையும் முதியோரை யும் பார்த்த திரு இம்ரான் அவர்களைப் போன்றவர்களுக்கு எதிர்காலத்தில் உதவவேண்டும் என்று உறுதி பூண்டார். அதற்கு ஏற்ப தற்போது 'ஃபிசியோதெரப்பி' எனப்படும் உடலைப் பிடித்து விடுவது, உடற்பயற்சி மூலம் உடலில் ஏற்படும் வலி, குறிப்பிட்ட சில நோய்கள், உடலில் உள்ள சில குறைபாடுகள் ஆகியவற்றைக் குணப்படுத்தும் அல்லது அவற்றிலிருந்து நிவாரணம் தரும் துறையில் பட்டப்படிப்பை அவர் மேற்கொள்ள இருக்கிறார். "வேலையிடப் பயிற்சியின் போது வலியால் துன்பப்படுபவர் களைப் பார்த்து மனவேதனை அடைந்தேன்.

"பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தை களைப் பார்த்தது என்னைப் பெருமளவில் சோகத்தில் ஆழ்த் தியது. இவர்களைப் போன்றவர் களுக்கு எதிர்காலத்தில் சிகிச்சை அளிக்க இலட்சியம் கொண் டுள்ளேன்," என்றார் திரு இம்ரான். சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (எஸ்ஐடி) தமது பட்டப்படிப்பை மேற்கொள்ள இருக்கும் திரு இம்ரானுக்கு சிங்கப்பூர் சுகாதார அமைச்சு குழுமம் ஜுலை 30ஆம் தேதியன்று கல்வி உபகாரச் சம்பளம் ஒன்றை வழங்கியது. பட்டப்படிப்பை முடித் தவுடன் நான்கு ஆண்டுகளுக்கு டான் டோக் செங் மருத்துவ மனையில் இம்ரான் பணிபுரிவார். "இந்த உபகாரச் சம்பளம் எனக்குக் கிடைக்கும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பகாலத்தில் படிப்பில் பின்தங்கியிருந்ததால் இதுபோன்ற உபகாரச் சம்பளங்களை நான் பெற்றதில்லை. இருப்பினும், சுகாதாரப் பராமரிப்புத் துறையில் வேலை பார்ப்பதுதான் என் இலக்கு.

அதற்குத் தகுந்தவாறு எனக்கு இந்த உபகாரச் சம்பளம் கிடைத்ததில் பெருமிதம் அடைகிறேன்," என்று கூறினார் திரு இம்ரான். படிப்பில் அவர் முன்பு பின்தங்கியிருந்ததற்குச் சுய கட்டுப்பாடு இல்லாததும் சோம் பலும் காரணம் எனக் கூறினார். ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு மாணவ னாக இருந்தபோதுதான் கல்வி யில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கினார். கல்வியில் மட்டுமன்றி ஓட்டப் பந்தயங்களிலும் அவர் சிறந்து விளங்குகிறார். தொடக்கப்பள்ளி ஆறாம் வகுப்பில் பயின்றுகொண்டிருந்த போது ஓட்டப் பந்தயங்களில் தமக்கு இருந்த ஆர்வத்தை அவர் அடையாளம் கண்டார். தொடக் கப்பள்ளி முடிந்து நேரடி பள்ளி சேர்க்கை (டிஎஸ்ஏ) முறையில் அவர் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் சேர அனுமதி பெற்றார்.

உயர்நிலை ஒன்றாம் வகுப் பிலிருந்து தொடக்கக் கல்லூரி முதல் ஆண்டு வரை, திடல் தடப் போட்டிகளில் கலந்துகொண்ட இம்ரான் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களிலும் கலந்துகொண் டார். உயர்நிலை இரண்டில் பயிலும்போது நடைபெற்ற தேசிய அளவிலான 'நெடுந்தொலைவு ஓட்டப் போட்டியில் இரண்டாம் நிலையில் வந்தார். அந்த ஆண்டு அவரது பள்ளி 'சி' பிரிவில் வெற்றி பெறவும் முக்கியப் பங்காற்றினார். பள்ளி முடிந்து தேசிய சேவையிலும் அவர் ஓட்டப் பந்தயங்களில் ஈடுபட்டார். தேசிய சேவையின்போது ஆயுதப் படை நடத்திய ஒட்டப் பந்தயப் போட்டிகளில் அவர் பல விருதுகளை வென்றார். ஓட்டப் பந்தய வீரர் என்கிற முறையில் உடல் பிடிப்பு, உடற்பயிற்சி மூலம் சிகிச்சை அளிக்கும் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ள தமக்கு ஆர்வம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். செய்தி: எஸ். வெங்கடேஷ்வரன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!