இலக்கியச் சுவை ஊட்டிய உள்ளூர் நூலாசிரியர்

உள்ளூர் எழுத்தாளர் திரு மா. அன்பழகன், இம்மாதம் 3ஆம் தேதி, ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்தார். அவர் எழுதிய ‘கூவி அழைக்குது காகம்’ என்ற நூலைச் சென்ற ஆண்டிலிருந்து வகுப்பில் படித்துப் பயன்பெற்ற உயர்நிலை இரண்டாம் வகுப்பு மாணவர்கள், அவருடன் நிகழ்ந்த உரையாடலில் தங்கள் ஐயங் களைத் தீர்த்துக்கொண்டதோடு அவர் பகிர்ந்துகொண்ட புதிய கருத்துகளை உள்வாங்கிக் கொண்டனர். ‘கூவி அழைக்குது காகம்’ என்ற புத்தகத்தை மாணவர்கள் அவ்வப்போது வகுப்பின் தொடக் கத்தில் கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்குப் படிப்பார்கள். நூலைப் படிக்க ஆரம்பித்த போது அதன் நடை கடினமாக இருந்ததாக மாணவியர் சிலர் கூறியிருந்தனர். இருப்பினும், ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந் திருந்த அந்தக் கடித இலக்கி யத்தைப் படிக்கப் படிக்க மாணவி கள் மத்தியில் ஒரு ரசனை ஏற்பட்டது.

கட்டுரையில் புரியாத வாக்கியங்களையோ சொற் களையோ தமிழாசிரியரிடம் கேட்டுச் சந்தேகத்தை மாணவர் கள் தீர்த்துக்கொண்டனர். அத்துடன் மாணவர்கள் தங்களுடைய மனதில் கதை தொடர்பாக எழுந்த கேள்வி களையும் கருத்துகளையும் குறித்துக்கொண்டு வந்தனர். இந்தப் பயிற்சியை மாணவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செய்து வந்தனர். மாணவர்களிடையே தோன்றிய கேள்விகளையும் கருத்து களையும் தமிழாசிரியர், தேர்ந் தெடுத்து எழுத்தாளரோடு கலந் துரையாடுவதற்காக எங்களிடம் ஒப்படைத்தார்.

எழுத்தாளர் திரு அன்பழகன் எங்கள் பள்ளிக்கு வந்தபோது இந்தக் கேள்விகளும் கருத்து களும் அவர் முன்வைக்கப்பட்டன. திரு அன்பழகன் எங்களது கேள்விகளுக்குப் பதில்கள் அளித்ததுடன் பற்பல சுவையான கருத்துகளையும் பகிர்ந்துகொண் டார். இது எங்களது சிந்தனையை மேலும் தூண்டியது.

“தொட்டனைத் தூறும் மணற் கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு” என்று வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப, நாங்கள் இந்த நடவடிக்கையைச் செய்யச் செய்ய, எங்கள் அறிவும் தமிழ்ப் பற்றும் வளர்ந்தது என்று சொன்னால் அது மிகையன்று. தாம் சேகரித்த பல தகவல்களை மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ள அப்புத்தகத்தை திரு அன்பழகன் எழுதியிருந்ததை நன்கு உணர முடிந்தது. இந்தப் புத்தகத்தைப் படித்து இளைய தலைமுறை பயன்பெற வேண்டும், தமிழ் இலக்கியச் சுவையைப் பருக வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் நூலை எழுதி இருந்தார். திரு அன்பழகன் ‘கூவி அழைக்குது காகம்’ என்னும் கடித இலக்கியத்தின் வாயிலாக சிறுகதைகள், காந்தியடிகள், திரு லீ குவான் யூ போன்ற தலைவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள், அவர் களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் போன்றவற்றை புனைந்துள்ளார். இக்கடித இலக்கியம் வழியாக நூலாசிரியர் பல நல்ல பண்பு நெறிகளைப் பற்றி எழுதி உள்ளார்

உதாரணத்திற்கு, இந்நூலின் மூலம் பிள்ளைகள் பெரியவர் களிடம் எப்படிப் பழகவேண்டும், ஒழுக்கம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம், நாட்டுப்பற்றின் அவசியம், சட்டதிட்டங்களை எப்படி மதித்து நடக்கவேண்டும், இன நல்லிணக்கத்தை எப்படி பேணலாம், நண்பர்களுடன் நட்புறவை எப்படி வளர்க்கலாம், உதவி செய்து வாழ்வதன் மகத்துவம் போன்ற பண்பு நெறிகளைக் கற்றுக்கொண்டோம்.

செய்தி: கண்ணன் ஜனனி சாதனா ரமேஷ் ஸ்ரீநிதி நாகராஜன் (ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்2018-08-27 06:00:00 +0800