ஜனில்: இன ரீதியான ஒதுக்கீடு இன்றும் தேவை வைதேகி ஆறுமுகம்

இன ரீதியிலான ஒதுக்கீடுகள் இல் லை யென்றால் வீவக எனும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகள் இன ரீதியாக பிரிக் கப்படும் என்றும் இதனால் சிறுபா ன்மை சமூகம் மேலும் மோசமான நிலையை அடையும் என்றும் கூறி னார் போக்குவரத்து; தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி. “இன ரீதியான ஒதுக்கீடு என்பது வீட்டு விவகாரம் மட்டும் அல்ல. சிங்கப்பூரின் ஒவ்வோர் இடத் திலும் பல இனத்தவரின் பிர தி நிதித்துவம் இருப்பது பற்றி யது. சிங்கப்பூரின் இன ரீதியான விகி தாச்சாரத்தைப் பரவலாகப் பிரதிநி திக்கும் வண்ணம் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் வீவக புளோக்கு களிலும் பேட்டைகளிலும் ‘இஐபி’ எனும் இன ரீதீயான ஒதுக்கீடு நடப்புக்கு வந்தது. “இவ்வாண்டில் இந்த ஒதுக்கீடு இல்லை என்றால் சிங்கப்பூரின் சில இடங்களில் அதிக அளவி லான இந்தியர்கள் வசிப்பார்கள், சில இடங்களில் இந்தியர்களே வசிக்கமாட்டார்கள்,” என்றார் டாக்டர் ஜனில்.

தேசிய தின பேரணி உரைக்குப் பிந்திய கலந்துரையாடல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு டாக்டர் ஜனில் பதிலளித்தார். மக்கள் கழக இந்திய நற்பணிப் பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த கலந்து ரையாடலில் அடித்தளத் தலைவ ர்கள், நற்பணி பேரவையின் தொண்டூழியர்கள், மற்ற இந்திய அமைப்புகளின் உறுப்பினர்கள் எனக் கிட்டத்தட்ட 350 பேர் பங் கெடுத்தனர்.

தேசிய தினப் பேரணி உரைக்குப் பிந்திய கலந்துரையாடலை (இடமிருந்து) செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, போக்குவரத்து; தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி ஆகியோர் வழிநடத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்