ஆன்ட்ரியா: கவர்ச்சி வேடம் வேண்டாம்

இனி கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளாராம் ஆன்ட்ரியா. குறிப்பாக, கதாநாயகர் களுடன் நெருக்கமாக இருப்பது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்க்கிறாராம். வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்றால் சற்றும் யோசிக்காமல் கால்‌ஷீட்டை அள்ளிக் கொடுப்பார் என்று பெயரெடுத்துள்ளார் ஆன்ட்ரியா. ‘தரமணி’, ‘விஸ்வரூபம்- 2’ ஆகிய இரு படங்களிலும் நடிப்பால் அசத்தினார். குறிப்பாக, ‘விஸ்வ ரூபம்-2’ படத்தில் சண்டைக் காட்சிகளிலும் மிரட்டியிருந்தார். தற் போது ‘வடசென்னை’யில் நடிப்பவர், இப்படம் தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என உறுதியாக நம்புகிறாராம். “இனி தரமான, நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்கப் போகிறேன். முத்தக் காட்சி, புகைபிடிக்கும் காட்சி, காதலருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளில் நடிக்குமாறு வற்புறுத்தாதீர்கள்,” என்று தன்னை அணுகி கதை சொல்லும் இயக்குநர்களிடம் தொடக்கத்திலேயே கறாராகக் கூறிவிடுகிறாராம் ஆன்ட்ரியா.