காற்பந்து இறுதி ஆட்டத்தில் மோதும் ஜப்பான், தென்கொரியா

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான காற்பந்துப் போட்டியில் ஜப்பானும் தென்கொரியாவும் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியாவும் வியட்னாமும் மோதின. இதில் பலம் பொருந்திய தென்கொரியக் குழு 3=1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நடப்பு வெற்றியாளரான தென்கொரியாவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வியட்னாம் தவித்தது. தென்கொரியாவின் லீ சுக் வூ போட்ட இரண்டு கோல்கள் அக்குழுவின் வெற்றிக்கு வித்திட்டது. மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் ஐக்கிய அரபு சிற்றரசுகளை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது ஜப்பான்.

பந்துக்காகப் போராடும் வியட்னாம், தென்கொரிய வீரர்கள். படம்: ஏஎஃப்பி