நம்பிக்கை வீண் போகவில்லை என்கிறார் வி‌‌‌ஷால்

‘இரும்புத்திரை’ தமக்கு முக்கியமான படமாக அமையும் என்று நம்பிக்கை வைத்தது வீண் போகவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான ‘இரும்புத் திரை’ படம், நூறு நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கி றது. இதற்கான வெற்றி விழா, சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், இவ்விழாவை பெருமைக்காக நடத்த வில்லை என்றார். “எல்லாப் படங்களுமே வெற்றி அடையும். ஆனால் சில படங்களைத்தான் ரசி கர்கள் மனதார வாழ்த்துவார் கள். அதுபோன்று இந்தப் படம் எனக்கு அமையும் என நம்பினேன். “இதற்காக இயக்குநர் மித்ரனுக்கு நான் நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்க வேண் டும். இ சை ய மை ப் பா ள ர் யுவனை என்னுடன் பிறந்த சகோதரர் மாதிரிதான் நான் என்றைக் கும் பார்ப்பேன்.

ஒவ்வொரு முறையும் யுவனைச் சந்திக்கும்போது, ‘எப்படியா வது என்னைக் காப்பாத்திடுப்பா’ எனக் கையெடுத்துக் கும்பிடுவேன். இன்று வரை என்னைக் காப்பாற்றி வருகிறார். “படத்தொகுப்பாளர் ரூபன்தான் எனக்கு மித்ரனை அறிமுகப்படுத்தி வைத்தார். எனவே ரூபனுக்கும் நன்றி. “நிறைய பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என நான் மட்டும் நினைக்க வில்லை. எல்லோருமே இப்படி நினைக் கிறார்கள். இது நல்ல விஷயம். “சமந்தா செய்துள்ள நல்ல விஷ யங்கள் பல பேருக்குத் தெரியாது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சமூக விஷயங்களில் ஈடுபடுகிறோம். நல்லது செய்பவர்கள்தான் அரசியல்வாதி என் றால் நாங்கள் எல்லோரும் அரசியல் வாதிகள்தான்”. அந்தப் பக்கம் உட்கார்ந்த விஷாலை, இந்தப் பக்கம் இருக்கிற மேடையில் உட்கார வைத்தது ரசிகர்கள் கொடுத் துள்ள அங்கீகாரம்தான். அதை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன். ஒரு தயாரிப்பாளராக இப்படத்துக்குரிய மரியாதையை இவ்விழா மூலம் தந்திருக் கிறேன்,” என்றார் விஷால்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம்

18 Jul 2019

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

‘உணர்வு’ படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம்

18 Jul 2019

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் ‘உணர்வு’