உலகின் ஆகப்பெரிய வர்த்தக அமைப்பு

வட்டார நிலையிலான விரிவான பொருளியல் பங்காளித்துவ ஒப்பந் தம் குறித்த பேச்சுவார்த்தை ஒரு முக்கியக் கட்டத்தை அடைந்திருப் பதாக நேற்று ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற 50ஆவது ஆசியான் பொருளியல் அமைச்சர் கள் கூட்டத்தைத் தொடக்கி வைத்து பிரதமர் லீ பேசினார். ஆசியான் உறுப்பு நாடுகளின் உந்துதல் காரணமாக ‘ஆர்சிஇபி’ எனப்படும் இந்த வர்த்தக ஒப்பந்தம் இவ்வாண்டின் இறுதிக்குள் கையெழுத்தாகும். அவ்வாறு இடம்பெறும் ஒப்பந்தம் உலகிலேயே மிகப் பெரிய வர்த்தகக் கூட்டணியை உருவாக்கும். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இருக்கும்.

பத்து ஆசியான் உறுப்பு நாடு கள் உள்பட சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இந்த ஒப் பந்தத்தில் கையொப்பமிடும். ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட நாடுகள் ஓர் உயர்தர பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தை இந்த ஆண்டில் உறுதிப்படுத்த தொலை நோக்குப் பார்வையுடன், உத் வேகத்தைக் கைவிடாமல், ஆக்கப் பூர்வமாக ஈடுபட்டு, அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ ஊக்குவித்தார்.