தோல்வியிலிருந்து மீண்ட வெஸ்ட்ஹேம்

விம்பிள்டன்: விம்பிள்டன் குழு விற்கு எதிரான பிற்பாதி ஆட்டத் தில் மீண்டெழுந்த வெஸ்ட்ஹேம் குழு இஎஃப்எல் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றா வது சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கிய இரண் டாவது நிமிடமே முதல் கோலைப் போட்டு வெஸ்ட் ஹேம்மிற்கு அதிர்ச்சி அளித்தது விம்பிள்டன். ஆனால் 18வது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார் விம் பிள்டன் வீரர் ராட் மெக்டோ னால்ட். இருப்பினும் விம்பிள்டன் குழு வின் தற்காப்பு ஆட்டத்தைத் தகர்த்து 10 பேர் கொண்ட குழு விற்கு எதிராகக்கூட கோல் போட முடியாமல் திணறியது பிரிமியர் லீக் குழுவான வெஸ்ட் ஹேம். இந்நிலையில் 63வது நிமிடத் தில் விழுந்தது வெஸ்ட்ஹேமின் முதல் கோல். டியோப்பைத் தொடர்ந்து 83வது நிமிடத்தில் ஒக்போன்னா போட்ட இன்னோர் கோல் வெஸ்ட்ஹேமிற்கு முன்னிலை பெற்றுத் தந்தது. காயம் பட்டதற்கான கூடுதல் நேரத்தின்போது ஹெர்னான்டஸ் போட்ட கோலால் 3=1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹேம் வெற்றி பெற்றது. வெஸ்ட் ஹேம் நிர்வாகியாகப் பொறுப்பேற்றுள்ள மேனுவேல் பெலிகிரினியின் முதல் வெற்றி இது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் வீரர் ஃபெர்னான்டோ லோரெண்டே (இடமிருந்து மூன்றாவது) போட்ட கோல் சிட்டியின் அரையிறுதி கனவைத் தவிடுபொடியாக்கியது. படம்: ஏஎஃப்பி

19 Apr 2019

கார்டியோலா: கொடுமையான தோல்வி