சுடச் சுடச் செய்திகள்

தங்கம் வென்ற சிங்கப்பூர் மங்கையர்

ஜகார்த்தா: படகோட்ட போட்டியில் சிங்கப்பூர் மங்கையர் தங்கப் பதக் கம் வென்றுள்ளனர். மொத்தம் ஆறு நாட்கள் நடை பெறும் இப்போட்டியில் நேற்றைய ஐந்தாவது நாளே தங்கத்தை உறுதிப்படுத்தினர் சிங்கப்பூர் வீராங்கனைகள். இந்தோனீசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் கடந்த ஐந்து நாட்களாக இப்போட் டியின் அனைத்து சுற்றுகளிலும் வென்று அதிக புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தனர் சிசேலியா லோவும் கிம்பர்லி லிம்மும். இது சிங்கப்பூருக்கு கிடைத்து உள்ள நான்காவது தங்கப்பதக் கம். 37 புள்ளிகளுடன் சீன வீராங் கனைகள் இரண்டாம் இடம் பிடிக்க 13 புள்ளிகள் முன்னிலை பெற்றனர் சிங்கப்பூர் மங்கையர். ஐந்து நாடுகள் பங்கேற்ற இப் போட்டியில் இந்தியாவின் வர்ஷா கௌதம்-சுவேதா செர்வேகர் இணை மூன்றாவது இடத்தில் உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon