அர்ப்பணிப்புடன் நடித்த கேத்தரின் நடிகை கேத்தரின் தெரேசா

மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிப்பதாக பாராட்டியுள்ளார் இயக்குநர் சாய் சேகர். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் புதுப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். அவரது இணையாக ஒப்பந்தமாகியுள்ளார் கேத்தரின். “இது வழக்கமான கதாநாயகி வேடமல்ல. நன்றாக நடிக்கத் தெரிந்தவர்தான் எங்களுக்கு வேண்டும். அதனால்தான் கேத்தரினை ஒப்பந்தம் செய்தோம். அவரும் மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்துள்ளார்,” என்கிறார் சாய்சேகர். குறிப்பிட்ட ஒரு காட்சியில் கேத்தரினின் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு தரதரவென்று இழுத்து வருவாராம் வில்லன். மற்றொரு காட்சியில் 30 கிலோ எடையைச் சுமந்தபடி தொடர்ந்து 12 மணி நேரம் நடிக்க வேண்டி இருந்ததாம். இந்தக் காட்சிகளில் கொஞ்சம்கூட முகத்தைச் சுளிக்காமல் நடித்து முடித்தாராம் கேத்தரின்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்