‘தினமும் கற்று வருகிறேன்’

நடிகை ஹன்சிகா திரையுலகில் கால் பதித்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்நிலையில் தனது ஐம்பதாவது படத்தில் நடித்துக் கொண்டி ருக்கிறார். அதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாம். படத்தின் பெயர் ‘மஹா’. திரையுலகில் நாள்தோறும் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருவ தாகக் குறிப்பிடுபவர், முதல் படத்தில் நடிக்கும்போதே ‘திரையுலகில் நம்மால் முத்திரை பதிக்க முடியும்’ என்ற எண்ணம் தமக்கு இருந்ததாகச் சொல்கிறார். “இந்த நீண்ட பயணத்தில் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அவற்றையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு படமும் வெவ்வேறு அனுபவங்களைத் தந்துள்ளன. “சில நல்ல மனிதர்களைப் பல சாதனை யாளர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர் களிடம் பேசும்போது, பழகும்போது பல வற்றைக் கற்றுக்கொள்ள முடிகிறது. அவர்களின் அனுபவங்கள் நமக்கும் பாட மாக அமைகின்றன,” என்கிறார் ஹன்சிகா.

தொடக்கத்தில் ஓராண்டில் 6 படங்க ளுக்கு மேல் நடித்து வந்தவர், இப்போது சற்றே அடக்கி வாசிக்கிறார். ஒரே மாதிரி யான கதைகளைத் தவிர்த்து வித்தியாச மான படைப்புகளில் நடிக்க வேண்டும் எனும் ஆர்வமே இதற்குக் காரணமாம். “நமது கணிப்புகள் சில சமயங்களில் தவறாகிவிடும். நம்மையும் அறியாமல் சில தவறுகளைச் செய்கிறோம். ஆனால் அந்தத் தவறுகளில் இருந்துதான் பல வற்றைக் கற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் எந்தத் தவறும் இதுவரை என்னை வீழ்த்தி விடவில்லை. “கடந்த ஆண்டில் மட்டும் 20 கதை களை நிராகரித்துள்ளேன். முன்பெல்லாம் ஆண்டுக்கு 8 படங்களில் நடித்த நிலை மாறி இப்போது 4 படங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். அதற்காக நான் ஓய்வாக இருப்பதாகக் கருதக்கூடாது. இப்போதும்கூட தினமும் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்.” ஹன்சிகா நல்ல ஓவியர் என்பது தெரி யும். இடைவிடாத படப்பிடிப்புக்கு மத்தி யிலும் ஓவியங்களைத் தீட்டுவதில் கவ னம் செலுத்துகிறாராம்.