பெட்ரோல் விலை: தலைவர்கள் கண்டனம்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட தற்கு திமுக தலைவர் மு.கருணா நிதி கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் 5 முறைக்கு மேல் கலால் வரி மத்திய அரசால் உயர்த்தப் பட்டதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

"அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரு மளவு குறைந்துள்ளதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசும் டீசல் விலை லிட்டருக்கு 85 காசும் மட்டுமே குறைக்கப் பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளி யான ஒரு சில நிமிடங்களிலேயே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி யது," என கருணாநிதி கூறி உள்ளார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்வுக்கு, எண்ணெய் விலை உயர்வும் காரணமாகச் சொல்லப்படுவது உண்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், கச்சா எண்ணெய் விலை குறைந்திருக் கும்போது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளையும் அதே அளவுக்குக் குறைத்தால் ஒட்டுமொத்த விலை வாசியும் குறைய வழி பிறக்கும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உற்பத்தி விலையை உயர்த்தி மோடி அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என ஈவிகேஎஸ். இளங் கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!