காயம் காரணமாக இந்தியக் குத்துச்சண்டை வீரர் விலகல்

ஜகார்த்தா: இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிருஷ்ணா (படம்) காயம் காரணமாக ஆசிய விளை யாட்டு போட்டியில் இருந்து வில கினார். 75 கிலோ எடைப்பிரிவில் சிறப் பாக செயல்பட்டு வந்த அவர், நேற்று மாலை அரையிறுதி போட்டி யில் கஜகஸ்தான் வீரர் அமான்குல் அபில்கானுடன் மோதுவதாக இருந்தது. ஆனால், கண்ணில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்த தால் அவர் உடற்தகுதிப் பெற வில்லை. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விகாஷ் கிருஷ்ணனுக்கு கண் ணில் காயம் ஏற்பட்டது. காலிறு தியில் சீன வீரருடன் மோதியபோது காயம் மேலும் தீவிரமடைந்தது. எனினும், கடுமையாக போராடி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் உடற்தகுதி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. எனவே, அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

விகாஸ் கிருஷ்ணன் ஆசிய போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஸ்குவாஷ் அணிகளுக் கான அரையிறுதியில் இந்தியாவும் மலேசியாவும் மோதின. இதில் ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சுனன்யா, தான்வி ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 2=0 என்ற கணக் கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியின் ஆண்கள் பிரிவில் இந்தியா அரையிறுதியில் ஹாங்காங்கிடம் 0=2 எனத் தோற்று வெண்கலத்தோடு வெளியேறியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் வீரர் ஃபெர்னான்டோ லோரெண்டே (இடமிருந்து மூன்றாவது) போட்ட கோல் சிட்டியின் அரையிறுதி கனவைத் தவிடுபொடியாக்கியது. படம்: ஏஎஃப்பி

19 Apr 2019

கார்டியோலா: கொடுமையான தோல்வி