ஒரே பிரிவில் மேன்யூ, யுவென்டஸ்

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் குழு நிலை போட்டி களை முடிவு செய்யும் குலுக்கல் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இப்பருவத்திற்கான சாம்பி யன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற்ற 32 குழுக்களும் எட்டு பிரி வுகளாகப் பிரிக்கப்பட்டன. இதில் இங்கிலிஷ் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனை டெட்டும் ஸ்பானிய காற்பந்துக் குழுவான யுவென்டசும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இக்குழுக்கள் இடம்பெற்றுள்ள ‘ஹெச்’ பிரிவில் வெலன்சியா, யங் பாய்ஸ் குழுக்களும் உள்ளன.

முந்திய மான்செஸ்டர் யுனை டெட் வீரரான ரொனால்டோ, தற் போதைய யுவெண்டஸ் வீரராக உள்ள நிலையில், இப்பிரிவில் யுவென்டஸ் குழுவிற்கே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ரியால் மட்ரிட் வீரராக மேன்யூ விற்கு எதிராக கடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ரொனால்டோ கோல் போட்டது குறிப்பிடத்தக்கது. அதுபோல் கடந்த முறை ரியால் மட்ரிட் குழுவிடம் தோற்று சாம்பி யன்ஸ் லீக் பட்டத்தை நழுவவிட்ட லிவர்பூல், ‘சி’ பிரி வில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழுவோடும் நபோலியோடும் மோதும். பலம் வாய்ந்த பிஎஸ்ஜி குழு விற்கே அடுத்தச் சுற்று வாய்ப்பு இருந்தாலும் லிவர்பூல் விட்டுக் கொடுக்காமல் விளையாடி கடந்த ஆண்டு கலைந்த கனவை நன வாக்க பாடுபடும்.

‘பி’ பிரிவில் பார்சிலோ னாவோடு மோத வேண்டி இருந் தாலும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு ‘நாக்=அவுட்’ சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த முறை இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டி, ஷகதார் டோன்ஸ்க், லயன் குழுக்களோடு ‘எஃப்’ பிரிவில் இடம் பெற்று உள்ளது. எனவே, சிட்டி குழுவால் எளிதில் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேற முடியும். கடந்த முறை சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான ரியால் மட் ரிட், ரோமா, சிஎஸ்கேஏ மாஸ்கோ குழுக்களோடு ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இத்தொடரின் முதல் ஆட்டம் இம்மாதம் 18, 19 தேதிகளில் நடைபெறவுள்ளது.