செரீனாவிடம் அடிபணிந்தார் வீனஸ்

நியூயார்க்: அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் தொடரின் மூன்றாம் சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6=1, 6-2 என நேர் செட்களில் மிக எளிதாக தம் சகோதரி வீனஸ் வில்லியம்சைத் தோற்கடித்தார். அடுத்த சுற்றில் செரீனா எஸ்டோனியாவின் கயா கனெப்பியை எதிர்கொள்கிறார். இதற்கிடையே, உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான ஸ்பெயினின் ரஃபாயல் நடால் கடும் போராட்டத்திற்குப் பின் 5=7, 7=5, 7=6, 7=6 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீரர் கரென் கச்சனோவை வீழ்த்தி, நான்காம் சுற்றில் நுழைந்தார். இன்னோர் ஆட்டத்தில் கனடாவின் மிலோஸ் ராவ்னிச், 2016ஆம் ஆண்டின் வெற்றியாளரான சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை 7-6, 6-4, 6-3 என நேர் செட்களில் வெற்றிகொண்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிரியாவின் இரண்டாவது கோலைப் போடும் கிரிஸ் இகோனோமிடிஸ் (இடது). படம்: இபிஏ

17 Jan 2019

இறுதிக்கட்ட கோலால் ஆஸ்திரேலியா வெற்றி