2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த இந்தோனீசியா விருப்பம்

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக ஏற்று நடத்திய உற்சாகத்தில் அடுத்த தாக 2032ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த இந்தோ னீசியா விருப்பம் தெரிவித்து உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்தும் உரிமையைப் பெறுவதற் கான போட்டியில் இந்தோனீசியா பங்கேற்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தலைவர் தாமஸ் பேக், ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் ஷேக் அகமது அல் ஃபகத் அல் சாபா ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னர் திரு விடோடோ தமது விருப்பத்தை வெளியிட்டார்.

“2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கான உரிமை யைப் பெறுவதற்கான போட்டியில் இந்தோனீசியா தனது பெயரை உடனடியாகப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளது,” என்று திரு விடோடோ அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பை திரு தாமஸ் பேக் வரவேற்றுள்ளார். “ஆசிய விளையாட்டுப் போட்டி களை மிகச் சிறப்பாக நடத்தியதற் காக இந்தோனீசிய அதிபருக்கு எனது வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொள்கிறேன்,” என்றார் திரு பேக். கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது