சிங்கப்பூர் குழுவினருக்குப் பாராட்டு

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளை யாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் மிகச் சிறப் பான செயல்பாட்டை வெளிப்படுத் தியதாக குழுவிற்குத் தலைமை ஏற்றுச் சென்ற திரு லீ வுங் இயூ பாராட்டியுள்ளார். கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் சார்பில் 264 பேர் 21 விளையாட்டுகளில் பங்கேற்றனர். அம்பெய்தல், ஆர்ட் டிஸ்டிக் நீச்சல், கான்ட்ராக்ட் பிரிட்ஜ், பாராகிளைடிங், ஜுஜிட்சு, சீலாட் ஆகிய ஆறு விளையாட்டு களில் சிங்கப்பூரர்கள் பங்கேற்றது இதுவே முதன்முறை.

இதுவரை சிங்கப்பூர் நான்கு தங்கம், நான்கு வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று, பட்டியலில் 18ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. “ஆசிய விளையாட்டுப் போட்டி களில் சிங்கப்பூர் விளையாட்டாளர் களின் செயல்பாடு அற்புதமாக இருந்தது. உலகின் முன்னணி ஆட்டக்காரர்கள் சிலரை எதிர் கொண்டபோதும் பயமின்றி விளை யாடி ஒவ்வொரு புள்ளிக்காகவும் வெற்றிக்காகவும் போராடினர். ஆசிய விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்றது பலருக்கு இதுவே முதல்முறை.

மேசைப்பந்து விளையாட்டில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றிய சிங்கப்பூர் வீராங்கனை யு மெங்யு. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விருதுகளைத் தட்டிச் சென்ற தேசிய உருட்டுப்பந்து வீரர் முகம்மது ஜாரிஸ் கோ (வலது), செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளியின் ஹாக்கி அணித் தலைவர் ஷான் சீ (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Feb 2019

எஸ்டி சிறந்த விளையாட்டு வீரர் விருதுகள் வென்ற இளையர்கள்

ஆட்டம் முடியும் தறுவாயில் சிட்டியின் மூன்றாவது மற்றும் வெற்றி கோலைப் போடும் ரஹீம் ஸ்டெர்லிங் (வலது). ஸ்டெர்லிங் கின்  இந்த கோல் முயற்சியைத் தடுக்க ஷால்க கோல் காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
படம்: ஏஎஃப்பி

22 Feb 2019

மனந்தளராமல் போராடி வெற்றியைப் பறித்த சிட்டி