சரியானவர்களை ஈர்க்க பிரதமர் லீ வலியுறுத்து

தேசிய உணர்வுமிக்க, சரியான மனப்போக்குடன் கூடிய ஆண் களையும் பெண்களையும் கவர்ந் திழுப்பதை சிங்கப்பூர் ஆகாயப் படை தொடரவேண்டும் எனப் பிரதமர் லீ சியன் லூங் வலி யுறுத்தியுள்ளார். சிங்கப்பூர் ஆகாயப் படையின் பொன்விழா நிறைவையொட்டி தெங்கா விமானப் படைத் தளத் தில் நேற்று சிறப்பு அணிவகுப்பு இடம்பெற்றது. ஆகாயப் படை விமானங் களும் வானில் சாகசம் செய்து காட்டின. இருபது விமானங்களும் ஆகாயப் படை பயன்படுத்தும் கருவிகளும் காட்சிக்கு வைக்கப் பட்டு இருந்தன.

புதிய, பலபயன் எரிபொருள் போக்குவரத்து ஏர்பஸ் ஏ330 அடுத்த தலைமுறை விமானமும் முதன்முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆகாயப் படை வீரர்கள் 480 பேர் பங்கேற்ற அணிவகுப்பை பிரதமர் லீ சியன் லூங் அதிகார பூர்வமாகத் தொடங்கிவைத்தார். தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தற்காப்புப் படைத் தலை வர் லெப்டினன்ட் ஜெனரல் மெல்வின் ஓங், ஆகாயப் படைத் தலைவர் மேஜர் ஜெனரல் மெர்வின் டான், என்டியுசி தலை மைச் செயலாளர் இங் சீ மெங் உள்ளிட்ட ஆகாயப் படையின் முன்னாள் தலைவர்கள் அறுவர் உட்பட கிட்டத்தட்ட 1,400 சிறப்பு விருந்தினர்களும் இந்த அணி வகுப்பைப் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “இன்றைய சிங்கப்பூர் ஆகாயப் படை நிபுணத்துவம் மிக்க, சிறப் பான பயிற்சி பெற்ற, சிறந்த படைக்கலன்களைக் கொண்ட தாக விளங்குகிறது,” என்றார்.

சிங்கப்பூர் ஆகாயப் படை பொன்விழா அணிவகுப்பில் கலந்துகொண்டு புதிய பலபயன் எரிபொருள் போக்குவரத்து ஏர்பஸ் ஏ330 அடுத்த தலைமுறை விமானத்தைப் பார்வையிடும் பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்). உடன் ஆகாயப் படை மேஜர் ஜெனரல் மெர்வின் டான் (வலது). படம்: சாவ் பாவ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நான்கு சிங்கப்பூரர்கள் மாண்ட இந்த விபத்திற்குக் காரணமான பி.மணிக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (படம்: மலேசிய போலிசார்)

19 Jul 2019

சிங்கப்பூர் குடும்பத்தைப் பலி வாங்கிய போர்ட் டிக்சன் விபத்து; லாரி ஓட்டுநருக்குச் சிறை

'செத்தொழியுங்கள்' என்று ஜப்பானிய மொழியில் கத்தியபடி ஆடவர் ஒருவர் தீப்பற்றக்கூடிய திரவத்தைக் கட்டடத்தினுள் ஊற்றியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

19 Jul 2019

ஜப்பான்: கட்டடத்திற்குத் தீ வைப்பு; 33 பேர் உயிரிழப்பு, மேலும் பலர் காயம்