கலாசாரக் கதம்பமாக இந்தியர்கள் சங்கமம்

இர்ஷாத் முஹம்மது

இந்தியப் பாரம்பரிய விளையாட்டு கள், பல்வேறு இந்திய கலா சாரங்களின்படி நடத்தப்படும் திருமண சம்பிரதாயங்கள் என பல்வேறு சுவாரசிய அங்கங் களுடன் ‘ரிதம் இன் யூனிட்டி = சங்கமம்’ எனும் விழா நேற்று தொழில்நுட்பக் கல்விக் கழகத் தில் வெகு சிறப்பாக நடந்தது. அங் மோ கியோ குழுத் தொகுதி, செங்காங் தனித் தொகுதி இந்திய நற்பணிச் செயற்குழுக்களின் ஏற்பாட்டில் நடந்த விழாவில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் லீ சியன் லூங் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் அங் கங்களைப் பார்வையிட்டு கேட்டறிந்தார். அரங்கத்தின் வெளியிலுள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரிய பரமபதம் விளையாட்டை யும் பிரதமர் ஒரு கை பார்த்தார். முன்னோடி தலைமுறைக் குடியிருப்பாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர், புதிதாக சிங் கப்பூர் குடியுரிமை பெற்ற குடும் பத்தினரையும் விழாவில் சந்தித் தார். இந்தியர்கள் எனும் அடை யாளத்துக்குள் பல்வேறு பிரிவு கள் உள்ளன.

தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, பஞ்சாப் என வெவ்வேறு கலாசாரத்தைச் சேர்ந்தவர்களை இந்த விழாவின் மூலம் ஏற்பாட் டாளர்கள் இணைத்தனர்.

அங் மோ கியோ குழுத் தொகுதி, செங்காங் தனித் தொகுதி இந்திய நற்பணிச் செயற்குழுக்களின் ஏற்பாட்டில் நேற்று நடந்த ரிதம் இன் யூனிட்டி = சங்கமம்’ நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்தியப் பாரம்பரியங்களை உற்சாகத்துடன் கண்டும் கேட்டும் கலந்துகொண்டும் பிரதமர் சிறப்பித்தார். இந்தியாவின் மிகப் பழமையான விளையாட்டுகளில் ஒன்றான பரமபதம் விளையாடி திரு லீ மகிழ்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஜுவல் சாங்கியில் உள்ள 'நைக்கி' கடையில் விற்கப்படும் டி-சட்டைகளில் தமிழ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Apr 2019

'சும்மா செஞ்சு முடி' - 'நைக்கி' தமிழ்