சென்னை மனித இயந்திர அறுவை சிகிச்சை மையமாக உலகம் தழுவிய புதிய முயற்சி

இந்தியாவில் மனித இயந்திர அறுவை சிகிச்சை வல்லுநர்களை உருவாக்குவதற்கு ஒரு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.- உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த அறிவாளி களைப் பயன்படுத்தி இந்த வகை முதல் முயற்சி இடம்பெறுகிறது. மனித இயந்திரங்களின் உதவியுடன் அறுவை சிகிச்சை களைச் செய்வதற்குத் தோதாக இந்திய மருத்துவ வல்லுநர்களை உருவாக்கும் நோக்கத்தில் அடுத்த ஏழு மாத காலத்தில் ஒரு புதிய இரண்டாண்டு பயிற்சி செயல்திட்டம் நடப்புக்கு வரும். அந்தச் செயல்திட்டத்தில் எட்டுப் பாடப்பிரிவுகள் இருக்கும். அறுவை சிகிச்சைகளில் மனித இயந்திரங்களைப் பயன்படுத்தும் துறையில் உலக ரீதியில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் எதுவும் இப்போது இல்லை என்பது குறிப் பிடத்தக்கது. சில நாடுகளில் செயல்படும் குறிப்பிட்ட சில பயிலகங்கள், அங்கு தங்கி படிக்கும் அறுவை சிகிச்சை வல்லுநர்களுக்குச் சில பயிற்சி செயல்திட்டங்களை வழங்குகின்றன. இந்தக் குறை யைப் போக்கும் வகையில் உலக ஒத்துழைப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

லண்டன் பல்கலைக்கழகம், ஃபுளோரிடாவில் உள்ள கிளிவ் லேண்ட் கிளினிக், சென்னையில் இருக்கும் அப்போலோ மருத்துவ மனை ஆகியவற்றைச் சேர்ந்த மனித இயந்திர அறுவை சிகிச் சைத் துறை முன்னோடிகளைக் கொண்டு ஒரு ஆதாரக் குழு இதற்காக அமைக்கப்பட்டு இருக் கிறது. “இந்தத் தொழில்துறை பங்காளிகளுடன் செயல்பட்டு பாடத்திட்டத்தை உருவாக்க நாங் கள் பணியாற்றி வருகிறோம். ‘செயல்திட்டம் அநேகமாக சென்னை அப்போலோ மருத்துவ மனையில் நடப்புக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

“அடுத்த மாதம் நடக்கவிருக் கும் அப்போலோ அனைத்துலக மலக்குடல் கருத்தரங்கின்போது புதிய செயல்திட்டம் தொடங்கப் படும்,” என்று அந்த மருத்துவ மனையைச் சேர்ந்த மலக்குடல் அறுவை சிகிச்சை ஆலோசகரான டாக்டர் மனிஷ் சந்த் தெரிவித்த தாக இந்தியாவின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தாள் குறிப்பிட்டு இருக்கிறது.