சோமாலியா தலைநகர் குண்டுவெடிப்பில் மூன்று பேர் பலி, 14 பேர் காயம்

சோமாலிய தலைநகரில் தற்கொலையாளி ஒருவன் தன்னைத் தானே வெடித்துக்கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர். பதினான்கு பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலால் அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. பள்ளிவாசல் ஒன்றின் கூரையும் உடைந்து சிதறியது. அல்- ஷாபாப் எனும் போராளி அமைப்பு தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசாங்க அலுவலகத்தில் நுழைய முயற்சி செய்த வெடிகுண்டு நிரப்பிய காரை தடுத்து நிறுத்தியபோது மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் அதிகாரியான சாலே ஹசான் உமர் தெரிவித்தார். படம்: ஈபிஏ