சிட்டி அபாரம்; நியூகாசல் பரிதாபம்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் சிட்டியும் நியூகாசலும் மோதின. இதில் சிட்டி 2=1 எனும் கோல் கணக்கில் வாகை சூடி மூன்று புள்ளிகளைத் தட்டிச் சென்றது. இந்த வெற்றியை அடுத்து, நான்கு ஆட்டங்கள் விளையாடிய நிலையில் பத்து புள்ளிகளுடன் லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் சிட்டி இருக்கிறது. நியூகாசலுக்கு எதிரான ஆட்டத்தைத் தனது சொந்த விளையாட்டரங்கத்தில் விளையாடிய சிட்டி, ஆட்டம் தொடங்கி 8வது நிமிடத்திலேயே கோல் போட்டு முன்னிலை வகித்தது. நியூகாசலின் தற்காப்பு ஆட்டக்காரர்களிடமிருந்து நழுவிச் சென்ற ரஹீம் ஸ்டெர்லிங், வலை நோக்கிப் பந்தை அனுப்பினார்.

பந்து வலையைத் தீண்ட, சிட்டி ரசிகர்கள் கொண் டாட்டத்தில் மூழ்கினர். இந்தப் பின்னடைவைச் சந் தித்தும் மனந்தளராமல் போராடி யது நியூகாசல். அதன் விடாமுயற்சிக்கு ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் பலன் கிட்டியது. சிட்டியின் தாக்குதல்களுக்கு இடம் கொடுக்காமல் பிடிவாதமாக தற்காத்த நியூகாசல் திடீர் தாக்குதல்களில் ஈடுபட்டு சிட்டியை பலமுறை மிரட்டிப் பார்த்தது. இந்த உத்தி கைகொடுத்தது. திடலின் வலக்கோடியிலிருந்து சிட்டியின் பெனால்டி எல்லைக்குள் விரைந்த நியூகாசல் தற்காப்பு ஆட்டக்காரர் டிஆண்ட்ரே யெட்லின் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார். இ டை வே ளை யி ன் போ து ஆட்டம் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் வெற்றி கோலைத் தேடி சிட்டி முனைப்புடன் விளையாடியது. ஆனால் நியூகாசல் வீரர்கள் சிறிதும் பதற்றம் அடையாமல் தங்களுக்கு விடுக்கப்பட்ட சவால்களை எதிர்கொண்டனர். இந்நிலையில், ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் வெகு தூரத்திலிருந்து வலை நோக்கி பந்தை அனுப்பினார் சிட்டியின் கைல் வாக்கர்.

கோல் போடும் முயற்சியில் ஈடுபடும் சிட்டியின் செர்ஜியோ அகுவேரோ. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்