வாகன விபத்து: மோட்டார்சைக்கிள் ஓட்டிமீது ஏறிச் சென்ற கார்

ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரை வுச்சாலையில் நேற்று காலை 9.56 மணிக்கு ஒரு காருக்கும் ஒரு மோட்டார்சைக்கிளுக்கும் இடையே நிகழ்ந்த விபத்து ஒன்றில் காயம் அடைந்த 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சுயநினை வுடன் டான் டோக் செங் மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட் டார்.

இந்த விபத்தில் அவர்மீது அந்த கார் ஏறிச் சென்றது. அந்த கார் ஓட்டுநர் உரிய நேரத்தில் அவரது வாகனத்தை நிறுத்த முடி யாமல் போனதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. அந்த மோட்டார்சைக்கிளோட்டி எந்தவொரு அசைவுமின்றி சாலை யில் கிடந்ததை அடுத்து அந்த கார் நின்றது. இந்த விபத்து குறித்த காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்ப ட்டது. இந்த விபத்தினால் அந்த மோட்டார்சைக்கிளோட்டி அதிக ரத்தம் இழந்ததாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.