டிரம்ப் கேலிப்பேச்சு: அமெரிக்க, இந்திய உறவில் மேலும் சிக்கல்

அமெரிக்கா=இந்தியா உறவில் எப்போதுமே எரிச்சலூட்டும் அம் சங்கள் இருந்து வந்துள்ளன. ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆங்கிலம் பேசும் விதம் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கேலி செய்வது அந்த உறவில் மேலும் ஒரு சவாலாக ஆகியிருக் கிறது. பிரதமர் மோடி போன்று அதிபர் டிரம்ப் பேசிக் காட்டும் ஒரு காணொளி புதுடெல்லியில் பரபரப் பாக பரவுகிறது. திரு டிரம்ப் பல விவாதிப்பு களின்போது திரு மோடியைப் போன்று பேசிக் காட்டி நையாண்டி செய்வதுண்டு என்றும் தெரிவிக்கப் படுகிறது.

அதிபர் டிரம்ப்புடன் சேர்ந்து செயல்படலாம் என்ற நம்பிக்கை திரு மோடியிடம் உறுதியாக இல்லை என்பதே பொதுவான எண்ணமாக உள்ளது என்று ‘தி இந்து’ செய்தித்தாளின் வெளி யுறவுத் துறை ஆசிரியர் திருமதி சுகாசினி ஹைதர் தெரிவிக்கிறார். அமெரிக்காவின் முந்தைய அதிபர்கள் நடத்தியதைப்போலவே டிரம்ப்பும் இந்தியாவை நடத்த வில்லை என்ற முடிவுக்கு இந்தியா வந்திருக்கிறது என்றார் அவர். அமெரிக்க வெளியுறவு அமைச் சர் பொம்பியோவும் தற்காப்பு அமைச்சர் ஜிம் மேட்டிசும் புதன் கிழமை புதுடெல்லி வரவிருக் கிறார்கள்.