கோலாலம்பூர்=சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தை ஈராண்டு ஒத்திவைக்க முடிவு

சிங்கப்பூர் = கோலாலம்பூர் அதி வேக ரயில் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதன் தொடர்பில் மலேசியாவும் சிங் கப்பூரும் உடன்பாடு கண்டிருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணக்கம் பற்றி இந்த வாரம் முறையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல அண்டை நாடுகள் என்ற எண்ணத்துடன் இந்தச் சமரசம் காணப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ரயில் திட்டத்தை ஒத்தி வைப்பதால் மலேசியா செலுத்த வேண்டிய 500 மில்லியன் ரிங்கிட் (S$166 மில்லியன்) அபராதத்தை செலுத்தவேண்டாம் என்று விட் டுக்கொடுக்க இணக்கம் காணப் பட்டு இருப்பதாகவும் தகவல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘தி எட்ஜ்’ பத்திரிகையின் நேற் றைய பதிப்பு தெரிவித்துள்ளது.

அந்த 350 கி.மீ. ரயில் வழித்தட திட்டம் 2020 மே 31 வரை இரண்டாண்டு காலத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் அந்த வெளியீடு குறிப்பிடுகிறது. சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான், ஃபேஸ்புக் பக்கத்தில் சென்ற வியாழக்கிழமை ஒரு தகவலை வெளியிட்டார்.