மியன்மாரில் செய்தியாளர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை

மியன்மாரில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்களான வா லோன், 32, கியாவ் சோ ஊ, 28, ஆகிய இருவருக்கும் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அரசாங்க ரகசிய சட்டத்தை அவர்கள் மீறிவிட்டார்கள் என்று அந்த நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மியன்மார் நாட்டில் இடம்பெறும் ஜனநாயகப் பரிணாம வளர்ச்சியில் ஒரு பின்னடைவு என்று ராய்ட்டர்ஸ் தலைமைச் செய்தியாளர் ஸ்டீபன் ஜே அட்லர் கருத்து தெரிவித்து இருக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இதுவரை மன்னார் கல்லறைப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வுப் பணியின்போது கிடைக்கப்பெற்ற 300க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 23 எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையது என்று அகழ்வுப் பணிக்கு பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்

17 Jan 2019

மன்னாரில் 300 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே (இடமிருந்து மூன்றாவது) முன்வைத்த பிரெக்சிட் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஏற்க மறுத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

17 Jan 2019

சூடுபிடிக்கும் பிரெக்சிட் விவகாரம்