தேர்தல், தீர்ப்பு வருகிறது; அதிமுக=அமமுக பதற்றம் கூடுகிறது

தமிழ்நாட்டில் திருவாரூர், திருப் பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக் கிறது. 18 சட்டமன்ற உறுப்பினர் கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரவிருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து ஆளும் அதிமுகவுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் இடையில் பதற் றத்தைக் கிளப்பிவிட்டுள்ளன. அதிமுக கட்சியின் ஒருங் கிணைப்பாளரும் துணை முதல் வருமான ஓ.பன்னீர்செல்வமும் அமமுக கட்சியின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரனும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புகார் தெரிவிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதில் கைத்தறி அமைச்சர் ஓ எஸ் மணியனும் சேர்ந்துகொண்டு இருக்கிறார். முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி தன்னை மிரட்டி வந்தது டிடிவி தினகரன் தான் என்று பன்னீர்செல்வம் சனிக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்தார். அதனையடுத்து அந்தப் பதவியைத் தான் கைவிட்டுவிட்ட தாகவும் அவர் கூறினார். அதிமுகவின் தலைவி ஜெய லலிதா உயிரோடு இருந்தபோதே முதல்வராக விரும்பியவர்தான் தினகரன் என்றும் பன்னீர் செல்வம் புகார் தெரிவித்தார். இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றிபெறும் என்றும் அந்தத் தேர்தலுக்குப் பிறகு பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்றும் பன்னீர்செல்வம் குறிப் பிட்டார். இதற்குப் பதிலளித்துப் பேசிய தினகரன், பன்னீர்செல்வத்துக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுவிட் டது எனத் திருப்பித் தாக்கினார்.

“அரசாங்கம் ஒன்றில் துணை முதல்வராக பொறுப்பு வகிக்கிறார் பன்னீர் செல்வம். இந்த நிலையில் அவரின் நம்பகத்தன்மை கேள் விக்குறியாகி இருக்கிறது. “அதிமுக அரசு ஊழலில் மூழ்கிவிட்டதாக மக்கள் கருது கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பன்னீர்செல்வம் பேசுவது எந்த அளவுக்கு உண்மை என்பது மக் களுக்குத் தானாகவே தெரியும்,” என்று தஞ்சாவூரில் செய்தியாளர் களிடம் பேசியபோது தினகரன் குறிப்பிட்டார்.