பதில் கூறாமல் நழுவும் அனுஷ்கா

ரசிகர்கள் தன்னிடம் ‘ஆட்டோ கிராஃப்’ கேட்டு காகிதத்தையோ சிறு புத்தகத்தையோ நீட்டினால் சலித்துக்கொள்ளாமல் கையெ ழுத்துப் போட்டுத் தருகிறார் அனுஷ்கா. அதில் ‘எப்போதும் சிரியுங்கள்... அன்புடன்’ என்று எழுதி கையெ ழுத்திடுவதுதான் அவரது வழக்கம். இதுநாள் வரை சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக நாட்டமின்றி இருந்தவர் தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடவும் செய்கிறார். பொதுவாக எத்தகைய கேள்வியாக இருந்தாலும் பதில் சொல்வது அனுஷ்காவின் வழக்கம். ஆனால் திருமணம் என்று யாரேனும் பேசத் துவங்கினால் மட்டும் கவனமாக விலகிவிடுகிறார். இதற்கிடையே முன்னணியிலுள்ள தெலுங்கு இயக்குநர் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம் அனுஷ்கா. தமிழில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறாராம்.