மெரினாவில் போராட்டம்: உயர் நீதிமன்றம் தடை

சென்னை: பல்வேறு அமைப்பினர் மெரினாவில் அவ்வப்போது போராட்டம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள் ளது. மெரினா கடற்கரைப் பகுதியில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தமிழக அரசு எடுத்துள்ள நடவ டிக்கை சரியானதுதான் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித் துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி தென் னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, 90 நாட்கள் போராட்டம் நடத்த அனு மதி அளிக்க இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனினும் காவிரிப் பிரச்சினைக்காக ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி அளித்து அவர் உத்தரவிட்டிருந்தார். இதை ஏற்க மறுத்த தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை சசிதரன், சுப்ரமணியன் ஆகிய இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்தது.