$185,000 மோசடி: இருவருக்கு சிறை

போலிசாராக ஆள்மாறாட்டம் செய்து 185,000 வெள்ளி ஏமாற்றிய மோசடி வழக்கு தொடர்பில் இரு தைவானிய ஆடவர்களுக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 31 வயது சியெ தெங்-=சியா ஈராண்டு, ஒன்பது மாதங்கள் சிறையும் 34 வயது சென் யூ-=ஜெங்கிற்கு மூன்றாண்டு சிறையும் விதிக்கப்பட்டது. இவர்களால் ஏமாற்றப்பட்டவர் கள் 51 வயது முதல் 81 வயது வரையிலானோர் அடங்குவர். சென்ற ஆண்டு ஜூன் 15ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை சிங்கப்பூர் அல்லது சீனாவை சேர்ந்த போலிஸ் என்று இருவரும் தொலைபேசி மூலம் ஆள்மாறாட்டம் செய்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ரையன் லிம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.