முதல் ‘லிப்போசக்‌ஷன்’ மரணம்: மருத்துவருக்கு கூடுதல் தண்டனை வழங்க மேல்முறையீடு

‘லிப்போசக்‌ஷன்’ எனப்படும் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் அறுவை சிகிச்சையைப் பெற்ற நோயாளி ஒருவர், சிகிச்சையின் போது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தினால் உயிர் இழந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சிகிச்சை அளித்த மருத்துவருக்கு அதிக பட்ச தண்டனையாக மூன்றாண்டு தற்காலிகப் பணிநீக்கம் விதிக்கு மாறு சிங்கப்பூர் மருத்துவ மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

டாக்டர் ஜிம் வாங் மெங் ஹங் தமது ஆர்ச்சர்ட் சாலை மருந்தகத்தில் நிலச்சொத்து நிறுவனத்தின் தலைவர் ஃபிராங்க்லின் ஹெங் என்பவருக்கு 2009ல் டிசம்பர் மாதம் செய்த ‘லிப்போசக்‌ஷன்’ சிகிச்சையின்போது தேவைக்கு அதிகமாக மயக்க மருந்து அளித்தார். அதன்பின் கண்காணிப்பில்லா மல் இருந்த, திரு ஹெங் மூச்சுத் திணறி உயிர் இழந்தார். இதுவே சிங்கப்பூரில் பதிவான அழகுசார்ந்த அறுவை சிகிச்சை தொடர்பான முதல் மரணம். இது தொர்பாக 2014ல், மருத் துவ விதிமுறைகளை மீறியதற்காக டாக்டர் வாங்கிற்கு 26,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. சிகிச்சையின்போது அவருக்கு உதவிய டாக்டர் சு சியு சுன் என்பவருக்கு 18,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2016ல் இருவரும் திரு ஹெங்கின் குடும்பத்திற்கு 3.26 மில்லியன் வெள்ளி நஷ்டஈடாகக் கட்ட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சிகிச்சையின்போது நோயாளிக்குப் போதிய கண் காணிப்பு வழங்காத குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட இருவருக்கும் எதிராக தொழில்ரீதியாக முறை தவறி செயல்பட்டதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவ ஒழுங்குமுறை தீர்ப் பாயம் டாக்டர் வாங்கிற்கு 18 மாத தற்காலிகப் பணிநீக்கமும், டாக்டர் சுவுக்கு ஆறு மாத தற்காலிகப் பணிநீக்கமும் விதித்தது. இத்தண்டனை மிகக் குறைவு என்றும் மருத்துவத் துறையில் பொதுமக்கள் கொண்டுள்ள நம் பிக்கையைக் குலைக்கும் என்பதன் அடிப்படையிலும் சிங்கப்பூர் மருத்துவ மன்றம் மூன்று நீதிபதி கள் அடங்கிய நீதிமன்ற அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளது.