அதிநவீன சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடம்

தேசிய பல்கலைக்கழகத்தின் i4.0 என்ற புதிய கட்டடத்தில், இயந்திர மனிதன் முகத்தை அடையாளம் கண்டு வாடிக்கையாளர்களின் சுவையுணர்வுக்கேற்ப சிறந்த காபியை வழங்கும் காபி கடை அமைந்துள்ளது. தனது அதிநவீன ஆறு மாடிக் கட்டடத்தில் இதுபோன்ற 250 வரையிலான, செயற்கை நுண் ணறிவு, இயந்திர கற்றல் போன்ற புதிய தொழில் முயற்சிகளை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த வுள்ளது. இதற்காக $25 மில்லியன் வெள்ளி வரை தேசிய பல்கலைக் கழகம் செலவிடும்.

ஆய்வு புத்தாக்கம் எனும் இந்தப் புதிய திட்டத்தை i4.0 கட்டடத்தின் திறப்புவிழாவில் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று அறிவித்தார். உயர் திறன் பெற்ற தனது பட்டக்கல்வி மாணவர்கள், முனைவர் பட்டத்துக்கு பிந்திய ஆய்வுக ளில் ஈடுபட்டிருக்கும் மாண வர்கள், ஊழியர்களைக் கொண்டு பல்கலைக்கழகம் இந்தத் தொழில் முயற்சியை மேம் படுத்தி செயல்ப டுத் தும் என்றார் அவர். தற் போதுள்ள தொழில்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு ஏது வாக, அதிநவீன தொழில்நு ட்பத்தைப் பயன்படுத்தி, புதிய சந்தைகளை இத்தொழில்கள் உருவாக்கும் என அவர் கூறினார்.

முக அடையாளத்தைக் கொண்டு கதவைத் திறக்கும் தொழில்நுட்பம். பல்கலைக்கழகத்தின் i4.0 கட்டடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில் முயற்சிகளில் இதுவும் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமது இளமைக் காலத்தில் சிங்கப்பூர் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் பிள்ளைகளிடம் எடுத்துக் கூறும் திரு முகம்மது ஹனிஃபா பின் ஜைனுல் அபிதீன், 72 (இடது). பிள்ளைகளோடு சேர்ந்து அந்தக் கதையைக் கேட்கிறார் அதிபர் ஹலிமா யாக்கோப் (வலமிருந்து 2வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Feb 2019

பிஞ்சு மனங்களில் பரிவை விதைக்க புத்தகம் மூலம் முயற்சி