தியோங் பாரு வீட்டில் தீ, மருத்துவமனையில் மூவர்

தியோங் பாரு வட்டாரம், இண்டஸ் சாலையிலுள்ள வீவக அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 15வது மாடி வீட்டில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணிக்கு பெருந்தீ மூண்டதில் புகையை உள்ளிழுத்த மூவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வீட்டின் வரவேற்பறை, சமையலறை, ஒரு படுக்கையறை ஆகியவை முற்றாகத் தீக்கு இரையாகிவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீச்சம்பவத்தின்போது வீட்டில் எவருமில்லை என்று அறியப்படுகிறது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுமார் 15-0 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் இரு நீர் பீய்ச்சிகளைக் கொண்டு தீ அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.