சைக்கிளோட்டிகளுக்கான பாதுகாப்புப் பரிந்துரைகள் ஏற்பு

நடைபாதைகளைப் பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் பகிர்ந்து கொள்வதன் தொடர்பில் சுய நடமாட்ட ஆலோசனைக் குழு செய்திருந்த அனைத்து பரிந்துரைகளையும் அரசாங்கம் ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு முற்பகுதிக்குள் அமலாக்கம் காணவிருக்கும் இப்பரிந்துரைகள் குறித்து போக்குவரத்து அமைச்சு நேற்று அறிக்கை வெளியிட்டது. சென்ற மாதம் 24ஆம் தேதி அன்று ஆலோசனைக் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளில் தனிநபர் நடமாட்டக் கருவிகளை யும் மிதிவண்டிகளையும் நடை பாதையில் ஓட்டும்போது வேகக் கட்டுப்பாட்டை மணிக்கு பதினைந் திலிருந்து பத்து கிலோமீட்டராக குறைப்பது, இவற்றைச் சாலையில் ஓட்டுவோர் கட்டாயமாகத் தலைக் கவசம் அணிவது முதலியவை அடங்கும்.

இவற்றுடன் தனிநபர் நட மாட்டக் கருவிகள், மிதிவண்டிகள் ஓட்டுவோர் சாலைச் சந்திப்பு களுக்கு வரும்போது, தங்கள் கருவிகளை நிறுத்திவிட்டு போக் குவரத்தைக் கவனிக்க வேண்டும் என்ற புதிய முன்னெச்சரிக்கை விதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. மோட்டார் சக்கர நாற்காலிகள், சுய நடமாட்ட ஸ்கூட்டர்கள் ஆகிய வற்றுக்கும் மணிக்கு பத்து கிலோமீட்டர் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கருவிகளைப் பயன்படுத்துவோர் உடற்குறை இல்லாதவர்களாக இருப்பின், விதியை மீறிக் கருவிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும் என்றும் இயல் பாகவே தனி நடமாட்டச் சவால்கள் கொண்டோருக்குப் பாதுகாப்பு கொடுக்கவும் முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித் தது. மேலும், மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்புறுதி பெற்றுக் கொள்வது வலுவாக ஊக்குவிக்கப் படுவதாக அமைச்சு கூறியது. குறிப்பாக, உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்குக் காப்புறுதி பெற்றுத் தருவது பரிந்துரைக்கப் படுகிறது.