சென்னை: சூடுபிடிக்கிறது பிள்ளையார் சிலைகள் விற்பனை

பிள்ளையார் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் பிள்ளையார் சிலைகள் செய்யும் பணி தீவிர மடைந்துள்ளது. பல்வேறு அளவு களில் பலவிதமான பிள்ளையார் சிலைகள் உருவாகி வருகின்றன. சென்னை அருகே உள்ள கொசப் பேட்டையில் பல அடி உயரமுள்ள வண்ணமயமான பிள்ளையார் சிலைகளைச் சாலைகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள தங்கள் வசதிக்கும் தேர்வுக்கும் ஏற்ப இத்தகைய சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். அடுத்து வரும் நாட்களில் சிலைகள் விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். படம்: சதீஷ்