உடல் உறுப்பு தானத்தில் முறைகேடு: சாடுகிறார் அன்புமணி

சென்னை: இந்தியாவில் உடல் உறுப்பு மாற்றுச் சந்தையாக தமிழகம் மாறியுள்ளது என பாமக இளையரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தானத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்று வருவதாக அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இரு தனியார் மருத்துவமனைகளில்தான் இத்த கைய முறைகேடுகள் நடப்பதாகவும் அன்புமணி சுட்டிக் காட்டியுள்ளார். “உறுப்பு மாற்று அறுவை சிகிச் சைக்காக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சராசரி யாக 12 கோடி ரூபாய் வசூலிக் கப்படுவதாகக் கூறப்படுகிறது. “இந்த உடல் உறுப்பு தான ஊழலில் தமிழக அரசின் உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் சிலருக்கும் அரசியல்வாதிகளுக் கும் தொடர்பிருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன,” என்று அன்புமணி கூறியுள்ளார்.

இதுகுறித்த உண்மைகளை மத்திய புலனாய்வுப் பிரிவு, அம லாக்கப் பிரிவு ஆகிய அமைப்பு களின் விசாரணை மூலம்தான் வெளிக்கொண்டு வரமுடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் முதல் அமைச் சர்கள் வரை பலருக்கும் இந்த ஊழலில் தொடர்பிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஊழல் விவகாரம் குறித்து தமிழக ஆளுநரிடமும் சிபிஐ இயக்குநரிடமும் விரிவான புகார் மனுவை அளிக்க இருப் பதாகவும் அன்புமணி மேலும் குறிப்பிட்டுள்ளார்.