வலதுசாரிக்கு எதிராக ஜெர்மனியில் மாபெரும் போராட்டம்

ஜெர்மனியில் குடியேறிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் வலதுசாரி ஆதரவாளர்களுக்கு எதிராக சிம்னிட்ஸ் நகரில் திங்கட்கிழமை மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரை அங்கு கூடியிருந்தவர்கள் உயரே தூக்கிய வண்ணம் வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் இனவாதப் பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம் என்று கூக்குரல் எழுப்பினர். ஜெர்மனியில் சிம்னிட்ஸ் நகரில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வலதுசாரிக் குழுவினர் கடந்த ஒரு வாரமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் அந்த நபரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி