சிரியா, ரஷ்யா, ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

வா‌ஷிங்டன்: சிரியாவில் போராளி கள் வசம் உள்ள இட்லிப் மாநிலத்தைக் கைப்பற்ற அர சாங்கப் படை கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இத்தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழக்க நேரிடுவதால் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ஐநாவும் அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் சிரியா அரசாங் கத்தையும் அதிபர் ஆசாத்திற்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் ரஷ்யாவையும் ஈரானையும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இட்லிப் மாநிலத்தின் மீது ஆசாத்தின் படைகள் ஆபத்தான விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்காமல் கடும் தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்று திரு டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் தெரி வித்துள்ளார். இட்லிப் மாநிலத்தின் மீது அரசாங்கப் படை நடத்தி வரும் தாக்குதல் அங்கு நீடிக்கும் சண்டையை மேலும் மோசமாக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ கூறிய ஒரு சில நாட்களில் திரு டிரம்ப் இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இட்லிப் மாநிலத்தில் அரசாங்கப் படையை எதிர்த்து சண்டையிடும் போராளிகள். படம்: ஏஎஃப்பி