ஃபெடரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய வீரர்

நியூயார்க்: அமெரிக்க பொது விருது டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறி னார் ஜான் மில்மேன். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பொது விருது டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 2ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், 55ஆம் நிலை வீரரான ஆஸ்தி ரேலியாவின் ஜான் மில்மேனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் 6-3, 5-7, 6-7, 6-7 என்ற செட் கணக்கில் ஜான் மில்மேனிடம் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேற ஜான் மில்மேன் காலிறுதிக்கு முன்னேறினார்.

ஃபெடரர் ஐந்து முறை அமெரிக்க பொது விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடந்த இன்னோர் போட்டியில் செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோக்கோவிச்சும் போர்ச்சுக்கலை சேர்ந்த ஜோ சவுசாவும் மோதினர். போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஜோகோவிச் விட்டுக் கொடுக்காமல் விளையாடினார். இதனால் முதல் செட்டை 6-3 என்ற கணக்கிலும் இரண்டாவது செட்டை 6-4 எனவும் மூன்றாவது சுற்றை 6-3 என்ற கணக்கிலும் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார். ஜான் மில்மேன் காலிறு திப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர் கொள்ளவிருக்கிறார். இன்னோர் காலிறுதியில் சிலிச்சும் நி‌ஷி கோரியும் மோதுகின்றனர்.

ஐந்து முறை அமெரிக்க பொதுவிருது டென்னிஸ் வெற்றியாளரான ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேன். படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சிக்காக ஜேடபிள்யூ மரியாட் ஹோட்டலைவிட்டு வெளியேறும் இத்தாலியின் இன்டர் மிலான் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Jul 2019

சிங்கப்பூர் வந்தது இன்டர் மிலான் குழு