ஓய்வை அறிவித்தார் அலைஸ்டர் குக்

லண்டன்: இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறப்போவதாக அறிவித்து உள்ளார் இங்கிலாந்து அணியின் நட்சத்திரம் 33 வயது அலைஸ்டர் குக். இங்கிலாந்திலேயே அதிக ஓட் டங்கள் எடுத்த வீரர் என்ற சாத னையைப் படைத்த குக்கிற்கு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த 6வது வீரர் என்ற பெருமையும் சேரும். இதுவரை 92 ஒருநாள் போட்டி களில் 3,204 ஓட்டங்கள் எடுத்து உள்ளார். அதுபோல் 160 டெஸ்ட் போட்டி களில் அவர் 12,254 ஓட்டங்கள் எடுத்து உள்ளார்.

அவரது சராசரி ஓட்ட எண்ணிக்கை 44.88. சராசரி 45க்குக் கீழ் இப்போது தான் இறங்கியுள்ளது. அதாவது இந்த ஆண்டு நடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி ஓட்ட எண்ணிக்கை 18.62 தான். கடந்த சில ஆட்டங்களாக பந் தடிப்பில் சோபிக்காத குக், ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என முடிவெடுத்துள்ளார். இந்தியாவின் நாக்பூரில் 2006ல் நடந்த தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 21 வயது வீரராக சதம் அடித்தார். 2010=11ல் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய மண்ணில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கி லாந்து வென்றது. அத்தொடரின் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார் குக்.

இந்தியாவிற்கு எதிராக 2006ல் நாக்பூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் கண்ட அலைஸ்டர் குக் தனது கடைசிப் போட்டியிலும் இந்தியாவை எதிர்கொள்கிறார். படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் வீரர் ஃபெர்னான்டோ லோரெண்டே (இடமிருந்து மூன்றாவது) போட்ட கோல் சிட்டியின் அரையிறுதி கனவைத் தவிடுபொடியாக்கியது. படம்: ஏஎஃப்பி

19 Apr 2019

கார்டியோலா: கொடுமையான தோல்வி