கீர்த்தி சுரே‌ஷுக்கு வந்த புது ஆசை

தனது தந்தை தயாரிக்கும் படத்தில் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறாராம் கீர்த்தி சுரேஷ். அது மட்டுமல்ல, அந்தப் படத்தைத் தனது மூத்த சகோதரி இயக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். “என் அம்மாவுடனும் பாட்டியுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அப்படத்துக்கு என் தந்தை தயாரிப்பாளராக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதை என் அக்கா இயக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவரது தந்தை உண்மையாகவே தயாரிப்பாளர் தான். கீர்த்தியின் தாய் மேனகா ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்தவர். பாட்டியும் சில படங்களில் நடித்துள்ளார். கீர்த்தியின் இந்த ஆசை குறித்து அறிந்த ரசிகர்கள் இந்தக் கலைக் குடும்பத்தின் விருப்பம் நிறைவேற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி உள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்