என் அப்பா வயதுள்ள எம்எல்ஏவை மணக்க விரும்பவில்லை: சந்தியா வாக்குமூலம்

ஈரோடு: உயிரை மாய்த்துக்கொள் வதாகப் பெற்றோர் மிரட்டியதால் அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனை திருமணம் செய்துகொள்ள சம்ம தித்ததாக இளம்பெண் சந்தியா தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12ஆம் தேதி பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கும், சத்திய மங்கலத்தைச் சேர்ந்த 23 வயதான சந்தியாவுக்கும் திருமணம் நடை பெற இருந்தது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி திடீரென மாய மானார் சந்தியா. போலிசார் அவரை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், மணப் பாறையில் உள்ள தனது தோழி சத்யா என்பவரது வீட்டில் அவர் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலிசார் உடனடியாக கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தி னர். சந்தியாவைத் தனி அறையில் வைத்து விசாரித்தார் நீதிபதி பாரதி பிரபா.

அப்போது எம்எல்ஏ ஈஸ்வரனுக் கும் தமக்கும் இடையே இருபது வயது வித்தியாசம் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பாததால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தார் சந்தியா. இதையடுத்து அவரது பெற்றோ ரையும் விசாரித்த நீதிபதி, சந் தியாவைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி அவர்களுடன் அவரை அனுப்பி வைத்தார். மேலும் சந்தியாவை அடித்துத் துன்புறுத்துவதோ உறவினர்கள் அவரிடம் விசாரிக்கவோ அனு மதிக்கக் கூடாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.