நிலவில் விவசாயம்: ஆய்வு நடப்பதாக மயில்சாமி தகவல்

திருப்பூர்: நிலவில் நீர், குகைகள் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். திருப்பூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நிலவில் விவசாயம் செய்ய முடியுமா, மரங்கள் வளர்க்க முடியுமா என்று ஆய்வு நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். “முன்பு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் 69 முறை செயற்கைக் கோள்களை ஏவின. அவை பல்வேறு காரணங்களால் தோல்வியில் முடிந்தன. எதனால் இத்தோல்வி ஏற்பட்டது என்பதைக் கண்டறிய இந்தியாதான் முதன்முதலில் ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து அத்தகைய தவறுகள் ஏற்படாமல் சந்திரனுக்கு நாம் செயற்கைக்கோள் அனுப்பினோம். முதல் முயற்சியிலேயே இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது,” என்றார் மயில்சாமி அண்ணாதுரை.