விவசாய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிரானதல்ல

சென்னை: விவசாய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105ஆவது பிரிவு செல்லும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டப்பிரிவு அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானதல்ல என்று குறிப்பிட்டிருந்த உயர் நீதிமன்றம், நிலத்தைக் கையகப் படுத்தும்போது கருத்துக் கேட்கத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105ஆவது பிரிவின் கீழ் சென்னை, சேலம் இடையேயான எட்டுத் தட பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போதே உயர் நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்தது.