போதுமான உடற்பயிற்சியின்மை: 1.4 பில்லியன் பேர் பாதிப்படைவர்

போதுமான உடற்பயிற்சி இன்மையால் நால்வரில் ஓர் ஆணும் மூவரில் ஒரு பெண்ணும் உயிர்க்கொல்லி நோய்க்கு ஆளாக நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகில் கால்வாசிப் பேருக்கு மேல் போதுமான உடற்பயிற்சி செய்வதில்லை என்று அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 1.4 பில்லியன் பேர் கடுமையான உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த எண்ணிக்கை கடந்த 2001ஆம் ஆண்டு இருந்ததைக் காட்டிலும் இப்போது கணிசமாக உயர்ந்துள்ளது. உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நடைப்பயிற்சி, விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவை போன்ற நட வடிக் கைகளில் ஈடு படாமல் வேலையில் மூழ்கிப் போதல், கிடைக்கும் சிறிதளவு ஓய்வுநேரத்தையும் தொலைக் காட்சி பார்ப்பதில் செல விடுவது போன்றவற்றால் உடல் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். உடல்ரீதியாக சுறுசுறுப்பின்றிஇ ருப்பவர் கள் இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் ஆகிய உயிர்க்கொல்லி நோய்களால் தாக் கப்படலாம். பிரிட்டன், அமெரிக்கா போன்ற அதிக வருமானம் ஈட்டும் நாடு களில்தான் அதிகமானோர் போதுமா ன உடற்பயிற்சி நடவடிக் கை களில் ஈடுபடுவதில்லை.

பிரிட்ட னில் மட்டும் கிட்டத்தட்ட 22 மில்லியன் பேர் அங்க அசை வின்றி ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கின்றனர். இவர் களில் பெண்களே அதிகமானோர். போதுமான உடற்பயிற்சி இல் லா தவர்கள் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் 32 விழுக்காடாக இருந்தது. அந்த எண்ணிக்கை 2016ல் 37%ஆக உயர்ந்துள்ளது. குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளில் இந்தப் பிரச்சினை 16% விழுக்காடாக கட்டுக்குள் உள்ளது என அந்த அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

போதுமான உடற்பயிற்சியின்றி சுமார் 1.4 பில்லியன் பேர் கடுமையான உயிர்க்கொல்லிக்கு ஆளாவர் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. படம்: ஏஎஃப்பி