குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்குப் புதிய எரிசக்தித் தரநிலை அறிமுகம்

எரிசக்தியை குறைவாகப் பயன் படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் கட்டட, கட்டுமான ஆணையம் புதிய எரிசக்தித் தரநிலையை அறிமுகம் செய் துள்ளது. ‘ஆகக் குறைந்த எரிசக்திக் கான பசுமைக் குறியீடு (Green Mark for Super Low Energy)’ எனப்படும் அந்தப் புதிய தரநிலையின்கீழ், அலுவலகக் கட் டடங்கள் ஓராண்டுக்கு ஒரு சதுர மீட்டருக்கு நூறு யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்த முடியாது. மரினா பே சேண்ட்சில் நடைபெறும் ‘சிங்கப்பூர் பசுமைக் கட்டட வாரத்தின்’ முதல் நாளான நேற்று இந்த அறிவிப்பு வெளி யானது.

அதிக எண்ணிக்கையிலான கட்டடங்கள் இந்தத் தன்னிச் சையான தரநிலைக்குத் தகுதிபெற உதவும் விதமாக, ஆகக் குறைவான எரிசத்திப் பயன் பாட்டுக் கட்டடங்களைக் கட்டும் வகையில் சொத்து மேம்பாட் டாளர்கள் உள்ளிட்ட கட்டுமானத் துறை நிபுணர்களுடன் கட்டட, கட்டுமான ஆணையம் இணைந்து செயலாற்றும் என ஆணையத்தின் தலைமை நிர்வாகி ஹியூ லிம் தெரிவித்தார். பசுமைக் கட்டட ஊக்குவிப்பை மேலும் முன் னெடுத்துச் செல்லும் விதத்தில் அது தொடர்பில் அதிதீவிர ஆய்வு களையும் புத்தாக்கத்தையும் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

“இத்தகைய புதிய செயல்திறன் மட்டக்குறியீடுகளை அமைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைத் தணிப்பதில் சிங்கப்பூரால் முக்கிய பங்காற்ற முடியும்,” என்றார் திரு லிம். தற்காப்பு அறிவியல், தொழில் நுட்ப முகவை, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிட்டி டெவலப்மென்ட்ஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந் தபட்சம் ஆகக் குறைந்த எரிசக்திப் பயன்பாட்டுத் திட்டத்தை உரு வாக்க உறுதிபூண்டுள்ளதாக ஆணையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார். முன்னதாக, ஆணையத்தின் மட்டக்குறியீட்டுத் திட்டத்தின்படி, ‘கிரீன் மார்க் பிளாட்டினம்’ என்பதே ஆகப் பெரிய பசுமைக் குறியீடாக இருந்தது.