குடிபோதையில் தந்தையை தாக்கிய தேசிய சேவையாளர்

முழு நேர தேசிய சேவையாளர் ‘மூன்றாம் சார்ஜண்ட்’ பெஞ்சமின் லர் ஸின் சீ, குடிபோதையில் டாக்சி ஓட்டுநரிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டத்தைத் தொடர்ந்து போலி சாரை கையில் கடித்ததன் பேரில் கைது செய்யப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட் டபோது லர், மீண்டும் குடி போ தையில் நிதானமிழந்து ஆத்தி ரத்தில் தனது தந்தையை அடித்ததுடன், ஒன்பதாம் மாடி அடுக்குமாடி வீட்டிலிருந்து மேசைக் காற்றாடியை வீசி எறிந் தார். 23 வயதான அவர், பொதுத் துறை ஊழியரைத் தாக்கியதையும் முன்யோசனை இன்றி நடந்து கொண்ட தையும் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

முதல் குற்றத் திற்காக அவருக்கு 4 வாரச் சிறைத் தண்டனையும் இரண்டாம் குற்றத்திற்காக ஆறு வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டன. 2-016ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பின்னிரவு 2.30 மணிக்கு லர், கிளார்க் கீயிலுள்ள ‘எட்டிக்கா’ என்ற மதுக்கூடத்தில் தனது நண்பர்களுடன் குடித்துக் கொண்டிருந்ததாக அரசாங்க வழக்கறிஞர் ஜோத்தம் தே தெரிவித்திருக்கிறார். புளோக் 823 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81இல் உள்ள தனது வீட்டிற்கு வெளியே டாக்சியி லிருந்து வெளியேறிய லர், நடை பாதையில் படுத்து, டாக்சி கட்ட ணத்தை ஓட்டுநருக்குக் கொடுக் கவில்லை. டாக்சி ஓட்டுநர் போலிசாரை அழைத்தார். ஜூரோங் வெஸ்ட் அக்கம்பக்க போலிஸ் நிலை யத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அதிகாலை 4.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது லர், தன்னை தூக்கி உட்காரவைக்க முயன்ற 35 வயது சீனியர் ஸ்டாஃப் சார்ஜண்ட் மைக்கல் யாப் ஹாவ் கியட்டின் வலது கையை இருமுறை கடித்தார்.