வெளிநாட்டு ஊழியர் தங்குமிட விதிமுறை மீறல் குறைந்தது

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிட விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்து வந்ததாக மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. ஆயினும், பெரும்பாலான விதி முறை மீறல்கள் நடக்கும் தனியார் குடியிருப்புகளை அதிகாரிகள் அணுக்கமாக கண்காணித்து வரு கின்றனர். வீட்டு விதிமுறைகளை மீறு வோரின் எண்ணிக்கை கடந் தாண்டு 1,176ஆக இருந்தது. 2015ஆம் ஆண்டில் அந்த எண் ணிக்கை 1,451ஆகவும் 2016ஆம் ஆண்டில் அது 1,316ஆகவும் இருந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

கிடைத்த ரகசிய தகவல்களின் பேரிலும் பரிந்துரைகள்படியும் மனி தவள அமைச்சு 2015 முதல் 2017 வரை 4,600க்கும் மேற்பட்ட சோத னைகளை நடத்தியது. வேலை அனுமதி அட்டையைக் கொண்டுள்ள 700,000 வெளி நாட்டு ஊழியர்களுக்கான தங்கு மிடங்கள் உட்பட பல்வேறு இடங் களில் அந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

2016ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர் தங்குமிட சட்டத்தின் அறிமுகம் போன்ற நட வடிக்கைகளால் விதிமுறைகளின் கடுமையை அதிகாரிகள் அதிகரித் துள்ளனர். அதே வேளையில் விதி முறை மீறல்களும் குறைந்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி, இங்குள்ள சுமார் 50 தங்குமிடங் களில் தானியக்க வங்கி இயந் திரங்கள், உடல் நலமற்றோ ருக்கான இளைப்பாறும் இடம், தொற்றுநோயாளிகளுக்கா ன தடுப்பு இடம் போன்ற வசதிகளை கொண்டிருக்க வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடங்களில் மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது ஊழியர்களுடன் உரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்