பிருத்வி களமிறங்க வாய்ப்பு

லண்டன்: இவ்வாண்டு தொடக்கத் தில் நியூசிலாந்தில் நடந்த 19 வய துக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணியைத் திறம்பட வழிநடத்தி கிண்ணம் வென்று தந்த பெரு மைக்குரியவர் 18 வயதான பிருத்வி ஷா. மும்பையைச் சேர்ந்த பிருத்வி தமது பந்தடிப்புத் திறமையால் அடுத்து இந்திய ‘ஏ’ அணியிலும் இடம்பிடித்தார். தென்னாப்பிரிக்க ‘ஏ’ அணி, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு எதிரான போட்டி களிலும் இவரது சத வேட்டை தொடர்ந்தது. இதனால் இங்கிலாந்து அணிக் கெதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி யில் இவருக்கு இடம் கிடைத்தது. நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 3=1 என்ற கணக்கில் ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டது.

இந்திய அணி வென்ற 3வது போட்டியைத் தவிர மற்ற மூன்று ஆட்டங்களிலும் அவ்வணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பந்த டிப்பில் சோடை போயினர். ஆகையால், நாளை தொடங்க இருக்கும் கடைசி, ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பிருத்வி ஷா தொடக்க வீரராகக் களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. களக்காப்பில் ‘ஸ்லிப்’ நிலை யில் லோகேஷ் ராகுல் அருமை யாகச் செயல்பட்டு வந்தாலும் நான்கு போட்டிகளிலும் ‘இன் ஸ்விங்’ பந்துகளில் அவர் ஆட்ட மிழந்தார்.

இளம் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட்டின் கருத்தை அறிந்த பின்னரே பிருத்வி ஷா இந்திய அணியில் சேர்க்கப்பட்டதாகப் பேச்சு நிலவுகிறது. படம்: ஐசிசி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது