தவறான மருந்து அளவு விவரங்கள்: 800க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிப்பு

மென்பொருளில் ஏற்பட்ட கோளாற் றினால் சனிக்கிழமை அன்று 104 மருந்தகங்களுக்குச் சென்றிருந்த 836 நோயாளிகளுக்குத் தவறான மருந்து அளவு விவரங்கள் சென்ற டைந்துள்ளதாக அறியப்படுகிறது. மருந்தகங்கள் பயன்படுத்தும் ‘ஜிபிகனெக்ட்’ எனும் மென் பொருளில் கோளாறு ஏற்பட்டதில் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை இப்போது இரட்டிப் பாக உயர்ந்துள்ளது.

‘ஐஹிஸ்’ எனப்படும் ஒருங் கிணைந்த சுகாதார தகவல் முறை இம்மென்பொருளை இயக்கும் அரசாங்க தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இம்மென்பொருள் தனியார் மருந்தகங்களுக்கு மருத் துவ, நிர்வாக ஆதரவை அளித்து வருகிறது. மென்பொருளை மேம் படுத்த முயன்றதே கோளாற்றை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மென் பொருளால் பாதிக்கப்பட்ட பெரும் பாலான மருந்தகங்களுக்கு ‘ஐஹிஸ்’ நிறுவனம் ஞாயிற்றுக் கிழமைக்குள் தகவல் தெரிவித் தது. தகவல் அறிந்த மருந்தகங் களும் தங்களின் நோயாளிகளுக்கு இது குறித்துத் தெரிவித்தன. மருந்தின் இரண்டு மி.லி உட்கொள்வதற்குப் பதிலாக இரண்டு பாட்டில்கள் உட்கொள் வது, மருந்தளவு தவறாகக் குறிப் பிடப்பட்டு இருந்தது போன்றவை அத்தவறான தகவல்களில் அடங் கும் என்று நிறுவனத்தின் பேச் சாளர் விளக்கினார்.

கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது என்றும் அவர் கூறினார். சென்ற ஆண்டு தொடக்கத்தில் துவங்கப்பட்ட ‘ஜிபிகனெக்ட்’ மென்பொருளைப் பயன்படுத்த 200க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் பதிவு செய்திருந்தாலும் கிட்டத் தட்ட 150 மருந்தகங்கள்தான் தற்போது பயன்படுத்தி வருகின் றன.